
நாகாலாந்தின் மறைந்த ஆளுநர் இல.கணேசன் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இல.கணேசன் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ஆக.15-ஆம் தேதி காலமானார்.
அந்த சமயத்தில் 'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு இருந்தார். அதனால் இல.கணேசனின் மறைவுக்கு அவரால் வரமுடியவில்லை.
இந்த நிலையில்தான் இல.கணேசன் குடும்பத்தினரைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
AIADMK General Secretary Edappadi Palaniswami visited the residence of the late Governor of Nagaland, La. Ganesan and offered condolences to his family.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.