
சென்னையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கும் பணி தொடங்கியது.
பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. மெரினா கடற்கரையில் மட்டும் 1,565 விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சிலைகளின் ஊர்வலத்தைத் தொடர்ந்து சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. சுமார் 16,500 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படையினர் 2,000 பேரும் கூடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னை எழும்பூர் புதுப்பேட்டை, ராயப்பேட்டை , ஐஸ் ஹவுஸ், ஆகிய பல்வேறு முக்கிய இடங்களான இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய இடங்களில் மசூதிகளிலும் கிறிஸ்துவ ஆலயங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் மேல் தளத்திலிருந்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ஊர்வலமாக விநாயகர் சிலைகள் எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் கிரைன் மூலமாக அவை கடற்கரைகளில் கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.