
சென்னையில் நாளை முதல் தேநீர் (டீ), காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, தேநீர் விலை ரூ.12லிருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15லிருந்து ரூ. 20 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.
பால் விலை, தேநீர்/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் தகவல்
சென்னையில் இந்த விலை உயர்வு உடனடியாக நாளை முதல் (செப். 1) அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள பெரும்பாலான கடைகளில் புதிய விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. இதன்படி,
டீ, பால், லெமன் டீ விலை ரூ. 15.
காபி ரூ. 20
ஸ்பெஷல் டீ - ரூ. 20
ராகி மால்ட் - ரூ. 20
சுக்கு காபி - ரூ. 20
பூஸ்ட் - ரூ. 20
ஹார்லிக்ஸ் - ரூ. 20
பார்சல்
கப் டீ - ரூ. 45
கப் - பால் - ரூ. 45
கப் பாபி - ரூ. 60
கப் ஸ்பெஷல் டீ - ரூ. 60
ராகி மால்ட் - ரூ. 60
சுக்கு காபி கப் - ரூ. 60
பூஸ்ட் கப் - ரூ. 70
ஹார்லிக்ஸ் கப் - ரூ. 70
போன்டா, பஜ்ஜி, சமோசா ஆகியவை ஒன்று ரூ. 15
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.