

திமுக தில்லி பிரதிநிதியும் விவசாய மாநில செயலாளருமான ஏகேஎஸ் விஜயனின் தஞ்சை வீட்டில் 300 சவரன் மதிப்புள்ள நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டுப்போனதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவின் தில்லி பிரதிநிதியும் - மாநில விவசாய அணி பிரிவு செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் வீடு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் நகர் பகுதியில் அமைந்துள்ளது.
அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று இருந்ததால், வீடு பூட்டி இருந்துள்ளது. இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து வைர நகைகள் - தங்க நகைகள் என் 300 சவரன் நகைகள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருள்கள் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து இந்த திருட்டுச் சம்பவம் குறித்து தமிழ் பல்கலைக்கழகப் பகுதி காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மோப்பநாய் உதவியுடன் கைரேகை நிபுணர்களுடன் தடயங்களை சேகரித்தனர்.
திமுக நிர்வாகி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் தஞ்சையில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.