சென்னை உள்பட 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில் சென்னை, கடலூர் உள்பட 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on
1 min read

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில் சென்னை, கடலூர் உள்பட 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதேசமயம் பாம்பன், தூத்துக்குடி ஆகிய 2 துறைமுகங்களில் 1ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக - புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் நிலவி வருகிறது.

தற்போது சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டிருக்கும் டிட்வா காரணமாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தரைக்காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.

சென்னையில் தொடரும் மழை! சாலைகளை சூழும் வெள்ளம்!!

சென்னையை நெருங்குவதற்கு முன்னதாகவே டிட்வா புயல் வலுவிழந்ததால் நேற்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட பலத்த மழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், இன்று காலைமுதல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் மழையின் தீவிரத்தன்மை அதிகரித்து வருகின்றது.

Summary

Cyclone Warning Number 3 has been raised at 7 ports, including Chennai and Cuddalore, as a deep depression is present in the Bay of Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com