கனமழைக்கு இன்றே கடைசி நாள்... சென்னையை நோக்கி திரளும் மேகக்கூட்டங்கள்!

சென்னையில் கனமழைக்கு இன்றே கடைசி நாளாக இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதைப் பற்றி...
கனமழையில்...
கனமழையில்...
Updated on
1 min read

சென்னையை நோக்கி மேகக்கூட்டங்கள் நகர்ந்து வருவதாகவும், கனமழைக்கு இன்றே கடைசி நாளாக இருக்கும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையை நோக்கி மேகக்கூட்டங்கள் நகர்ந்து வருவதால், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதுக்கு ஒரு எண்ட் கார்டு இல்லையா? - ஆம்,

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இன்றே கனமழைக்கு கடைசி நாளாகும். இந்த மழை இரவு வரை தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டிட்வா புயலால் எண்ணூரில் 500 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நவ. 30 ஆம் தேதி 51 மி.மீட்டரும், டிச. 1 ஆம் தேதி - 49 மி.மீட்டரும், டிச. 2 ஆம் தேதி 260 மி. மீட்டரும், டிச. 3 ஆம் தேதி - 269 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோன்று பெங்களூருவிலும் மழைக்கு வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Intense clouds moving into part of Chennai City. Dont be surprised if we get heavy rains in KTCC (Chennai) today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com