மன்சூர் அலிகான்(கோப்புப்படம்)
மன்சூர் அலிகான்(கோப்புப்படம்)

எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு! மன்சூர் அலிகான் காலவரையறையற்ற உண்ணாவிரதம்!

மன்சூர் அலிகான் காலவரையறையற்ற உண்ணாவிரதம் தொடங்கியிருப்பது பற்றி...
Published on

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நடிகரும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

பிகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த(எஸ்ஐஆர்) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகின்றது.

முதல்கட்டமாக அனைத்து வாக்காளர்களுக்கும் படிவங்களை வழங்கிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ), தற்போது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிற மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை அளிக்கும் வகையில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்துக்கு மன்சூர் அலிகான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை புதன்கிழமை காலை தொடங்கியுள்ள மன்சூர் அலிகான், எஸ்ஐஆர் பணிகளை நிறுத்தும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

Summary

Mansoor Ali Khan goes on indefinite hunger strike in protest against SIR work

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com