

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் கோவை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாளை (டிச. 4) கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வலுவிழந்த டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை இன்றிரவுடன் நிறைவு பெறும் என்று சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.