

சென்னையில் தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சிகள், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தின்போது விஜய்யிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி நேரடியாக விஜய்யைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.