

நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இண்டிகோ விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாகர்கோவில் - தாம்பரம்
நாகர்கோவிலில் இருந்து டிச. 7 இரவு 11. 15 மணிக்குப் புறப்படும் ரயில்(06012) மறுநாள்(டிச. 8) காலை 11.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
மறுவழியில் தாம்பரத்தில் இருந்து டிச. 8 பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் ரயில்(06011) மறுநாள்(டிச. 9) அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.
திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர்
திருவனந்தபுரத்தில் இருந்து டிச. 7 மாலை 3.45 மணிக்குப் புறப்படும் ரயில்(06108) மறுநாள்(டிச. 8) காலை 11.20 மணிக்கு எழும்பூரை அடையும்.
மறுவழியில் எழும்பூரில் இருந்து டிச. 8 பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் ரயில்(06107) மறுநாள்(டிச. 9) காலை 8 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.
கோவை - சென்னை சென்ட்ரல்
கோவையில் இருந்து டிச. 7 இரவு 11.30 மணிக்குப் புறப்படும் ரயில்(06024) மறுநாள்(டிச. 8) காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.
மறுவழியில் சென்ட்ரலில் இருந்து டிச. 8 பகல் 12.20 மணிக்குப் புறப்படும் ரயில்(06023) அன்று இரவு 10.30 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.