அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய்

சென்னை பனையூரில் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை...
TVK leader Vijay pays homage to Ambedkar at Panayur office
சென்னை பனையூரில் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை.
Updated on
1 min read

சென்னை பனையூரில் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய், சென்னை பனையூர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.

அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

TVK leader Vijay pays homage to Ambedkar at Panayur office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com