

சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை 71 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 38 விமானங்களின் புறப்பாடு, 33 விமானங்களின் வருகை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இன்றுடன் 7வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய விமான பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில், அந்த நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே பணிக் குழு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட இண்டிகோ விமான சேவை சீரடையத் தொடங்கியுள்ளது.
ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் அல்லது மிகவும் தாமதமாக விமானங்களை இயக்கியதற்காகப் பயணிகளுக்கு இதுவரை ரூ.610 கோடியை இண்டிகோ நிறுவனம் திருப்பி அளித்துள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், விமான சேவைகள் டிச.10-க்குள் நிலைமை சீராக்கப்படும் என்று நம்புவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.