

வரும் டிச. 12 ஆம் தேதி உயர் அழுத்தம் கொண்ட வறண்ட காற்றின் ஊடுறுவல் காரணமாக சிறிய குளிர் அலைகள் உருவாகவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை குறித்த தகவல்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீன் ஜான் தெரிவித்திருப்பதாவது:
”வரும் டிச. 12 ஆம் தேதி உயர் அழுத்தம் கொண்ட வறண்ட காற்றின் ஊடுறுவல் ஏற்படும். இதனால் மத்திய இந்தியா முழுவதும் சிறிய குளிர் அலைகள் போன்ற சூழலை உருவாக்கும். இதன் தாக்கம் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும், வடதமிழகத்திலும் உணரப்படும்.
பெங்களூரு மற்றும் ஓசூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10-12 டிகிரி செல்சியஸாக குறைந்து காணப்படும். இந்தச் சமயத்தில் உதகை, கொடைக்கானலில், 5 டிகிரி செல்சியஸுக்கு கீழே செல்ல வாய்ப்புள்ளது.
வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் வறண்ட மற்றும் குளிரான வானிலை நிலவும்.
டிசம்பர் மாத வானிலையானது, மேற்கு கடற்கரை நகரப்பகுதியில், இயல்புக்கு மாறாக அதிக வெப்பம் நிலவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.