

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் விடியற்காலையில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கேவி குப்பம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று விடியற்காலை முதல் கடும் பனி பொழிவு நிலவியது.
இதனால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் வேன்கள் இருசக்கர வாகனங்களில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் லோடு வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு வாகனத்தை இயக்கிச் செல்கின்றனர்.
மேலும் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாய பணியை மேற்கொள்ள முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.