வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு திமுகவினர் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு...
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு திமுகதொண்டர்கள் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிச. 11 ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்ததாலும் அதன்பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு திமுக தொண்டர்கள் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பெயர் விடுபட்டிருந்தால் அவர்களின் பெயர்களைச் சேர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வெற்றி வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Summary

MK Stalin speech at the DMK district secretaries meeting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com