வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை திடீர் சந்திப்பு

கோவையில் ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை சந்தித்துக்கொண்டது அரசியலில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

News image
அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம்.
Updated On :8 டிசம்பர் 2025, 6:21 am

இணையதளச் செய்திப் பிரிவு

கோவையில் ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை சந்தித்துக்கொண்டது அரசியலில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

கோவையில் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நடந்தது. இதில் தொண்டர்கள் மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அப்போது அங்கு இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில், பா.ஜ.க தலைவர்கள் மீண்டும் அவரை அழைத்து பேசுவதும்,  தமிழகத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசுவதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிர்ந்து உள்ளார்.

summary

O. Panneerselvam and Annamalai met in Coimbatore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.