

தமிழகத்தில் 99.27% எஸ்ஐஆர் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி தமிழகத்தில் இதுவரை 99.91% (6,40,59,971 பேர்) எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 99.27% (6,36,44,038 பேர்) பதிவேற்றம் செய்துள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
எஸ்ஐஆர் படிவங்களைப் பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து, வரும் டிச. 11-ஆம் தேதி வரை பிஎல்ஓ-க்கள் அல்லது வாக்காளா் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம்.
படிவங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளா்களின் பெயர்களும் டிச. 16-இல் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி(6,41,14,587) வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.