விஜய்
விஜய்Photo: TVK Youtube

11 நிமிடத்தில் பேசி முடித்து புறப்பட்ட விஜய்!

தவெக தலைவர் விஜய்யின் புதுவை உரை பற்றி...
Published on

புதுச்சேரி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெறும் 11 நிமிடங்களை தனது பேச்சை முடித்து புறப்பட்டுச் சென்றார்.

புதுச்சேரி உப்பளம் துறைமுக திடலில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

தவெகவின் கரூர் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

மேலும், கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக புதுவையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதால், புதுவையில் உள்ள பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராகப் பேசுவாரா? அல்லது தமிழக அரசியலை பற்றி பேசுவாரா? என்ற கேள்வி உலாவியது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து கார் மூலம் இன்று காலை புதுச்சேரிக்கு புறப்பட்ட விஜய், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே சென்றடைந்தார்.

இதனிடையே, 5,000 தொண்டர்களுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதி அளித்தனர். காவல்துறையின் தடுப்பை மீறி அனுமதி சீட்டு இல்லாத தொண்டர்கள் சிலரும் திடலுக்குள் புகுந்தனர்.

தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் பிரசார வாகனத்தில் நின்று, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தொடர்ந்து, தேர்தல் பிரசாரப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் முதலில் உரையாற்றினர்.

பின்னர், பிரசார வாகனத்தில் இருந்து வெளியேறிய விஜய், பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்த புதுவை அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, புதுவைக்கு மாநில அந்தஸ்து, மீனவர்கள் பிரச்னை பற்றி உரையாற்றிய விஜய், 11 நிமிடங்களில் பேச்சை முடித்துவிட்டு வாகனத்துக்குள் சென்றார்.

Summary

Vijay finished talking in 11 minutes and left.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com