

செங்கோட்டையன் நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டதாகவு, ஒருவேளை திருநெல்வேலியில் போட்டியிட செங்கோட்டையின் விரும்புகிறாரா எனத் தெரியவில்லை எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காஞ்சிபுரத்தில் பேட்டியளித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் சட்டமன்றம் தோறும் தமிழகம் தலைமை தமிழனின் பயணம் என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட ஓரிக்கை பகுதியில் நெசவாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கிராம சபைக் கூட்டத்தில் இன்று(டிச. 10) மாலை நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.
பொதுமக்கள் நெசவாளர்கள், விவசாயிகள் என பல தங்களது கோரிக்கைகளை தெரிவித்தபோது, அதற்கு பதில் அளித்து பேசியபோது, ”இன்னும் நான்கரை மாதங்களில் ஆட்சி முடியவுள்ள நிலையில், புதிய ஆட்சி வந்தவுடன் அனைத்தையும் நிறைவேற்றி தருவேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ”அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும்” எனவும் தெரிவித்தார்.
மேலும், இன்று தவெக நிர்வாக அமைப்பு தலைவர் செங்கோட்டையன் நயினார் நாகேந்திரன் நிற்கும் எந்த இடத்திலும் அவரை டெபாசிட் இழக்க செய்வேன் எனத் தெரிவித்தது குறித்து கேட்டபோது, ”என்னைவிட மூத்தவராக செங்கோட்டையன் இருந்தாலும், அவர் என்னை குருஜி என்று அன்புடன் அழைப்பார், ஆனால் நான் தெரிவித்த கருத்தை அவர் மாற்றி புரிந்து கொண்டுள்ளார். ஒருவேளை திருநெல்வேலியில் என்னை எதிர்த்து, செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா என்று தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் ஜெகதீசன், மாநில ஓபிசி அணி துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: திருப்பதி லட்டிலும் ஊழல்; பட்டிலும் ஊழலா? 10 ஆண்டுகளாக!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.