திருப்பதி லட்டிலும் ஊழல்; பட்டிலும் ஊழலா? 10 ஆண்டுகளாக!!

திருப்பதியில் 10 ஆண்டுகளாக பட்டு சால்வை விநியோகத்தில் ரூ. 54.95 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாகத் தகவல்
திருப்பதியில் பிரதமர் மோடிக்கு பட்டு சால்வை மரியாதை
திருப்பதியில் பிரதமர் மோடிக்கு பட்டு சால்வை மரியாதைகோப்புப் படம்
Updated on
1 min read

திருப்பதியில் 10 ஆண்டுகளாக பட்டு சால்வை விநியோகத்தில் ரூ. 54.95 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நன்கொடையாளர், முக்கிய பிரமுகர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு சால்வை வழங்கப்படும். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக திருப்பதிக்கு வழங்கப்பட்டு வந்தது பட்டு அல்ல, 100 சதவிகிதம் முழுமையான பாலிஸ்டர் துணி என்று தெரிய வந்துள்ளது.

திருப்பதியின் கிடங்கில் இருந்த சால்வைகளை, மத்திய பட்டு பகுப்பாய்வு வாரியத்துக்கு அனுப்பி தேவஸ்தான விழிப்புணர்வு சோதனை செய்தது. சோதனையில், சால்வையானது தூய மல்பெரி பட்டு நூலுக்கு பதிலாக, 100 சதவிகித பாலிஸ்டரால் செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது.

தேவஸ்தானத்துக்கு ஒரேயொரு நிறுவனம் மட்டுமே சால்வைகளை விநியோகித்து வந்தது. வெறும் ரூ. 350 மதிப்புள்ள பாலிஸ்டர் சால்வையை, பட்டு சால்வை எனக் கூறி ரூ. 1,300 கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்.

2015 முதல் 2025 வரையில், தேவஸ்தானத்துக்கு ரூ. 54.95 கோடி மதிப்பிலான பாலிஸ்டர் சால்வையை விநியோகித்து, கொள்முதல் மோசடியில் ஈடுபட்டு வந்ததையடுத்து, மாநில ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணயில் ஈடுபட்டுள்ளது.

திருப்பதியில் வழங்கப்படும் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக கடந்தாண்டு சர்சையான நிலையில், தற்போது பட்டு விநியோகத்திலும் ஊழல் நடந்திருப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க: அதிகரிக்கும் விவாகரத்து! இனி திருமணங்கள் இல்லை: பெங்களூர் கோயில் அதிரடி!

Summary

Polyester Shawls Sold As Silk In Rs 54 Crore Scam In Tirupati Temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com