

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதிக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மானத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் பதவிநீக்கத் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், பதவிநீக்கத் தீர்மானத்தைக் குறிப்பிட்டு மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
இந்த நிலையில், மக்களவையில் அமித் ஷா பேசுகையில், ``ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கியதற்காக, அவருக்கு எதிராக பதவிநீக்கத் தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றனர். சுதந்திர இந்தியாவில், ஒரு நீதிபதியின் தீர்ப்புக்காக இதுபோன்று முன்பு ஒருபோதும் நடந்ததில்லை.
ஒரு மலையின் உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபமேற்ற வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு.
எப்போது இவர்களின் தோல்வி தொடங்கியதோ, அப்போதே இவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறைகூறத் தொடங்கி விட்டனர். ராஜிவ் காந்தி ஆட்சியில்தான், மின்னணு வாக்குப்பதிவுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது’’ என்று தெரிவித்தார்.
நீதிபதி பதவிநீக்கத் தீர்மானம் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு எதிராக முழக்கமிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிக்க: எச்.ராஜா, ஆளுநர் ஆர்.என்.ரவி போல ஒரு நீதிபதி செயல்படுவதா? ஓய்வுபெற்ற நீதிபதி கேள்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.