2026 தேர்தல்: பாமக சார்பில் போட்டியிட டிச. 14 முதல் விருப்பமனு! - அன்புமணி

பாமக சார்பில் தேர்தலில் போட்டியிட டிச.14 முதல் விருப்பமனு அளிக்கலாம் என அன்புமணி அறிவிப்பு...
Application to contest tn election on behalf of PMK from Dec. 14: Anbumani
அன்புமணிகோப்பிலிருந்து...
Updated on
1 min read

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட வருகிற டிச.14 முதல் விருப்பமனு அளிக்கலாம் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 14.12.2025  ஞாயிற்றுக்கிழமை முதல் 20.12.2025 சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்திருக்கிறார்கள்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்.

போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க  கடைசி நாளான டிச. 20 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. பாமகவில் அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை என ராமதாஸ் கூறி வரும் நிலையில் அன்புமணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Application to contest tn election on behalf of PMK from Dec. 14: Anbumani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com