

எனது பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்றும் அவருக்கு எந்த உரிமையும் இல்லை என பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ்,
"தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தோம். சம்பந்தமுமின்றி அன்புமணி தரப்பு பொய் மூட்டைகளுடன் ஆஜரானது. தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட ஆவணத்தில் எனது கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. எனது பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்தக் கூடாது. வேண்டுமென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கட்டும். இனி என் பெயர், படத்தை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. அதற்கு அவருக்கு உரிமை இல்லை.
கட்சி எங்களுக்குத்தான் சொந்தம் என்று நீதிமன்றத்தில் சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. கட்சி எனக்கு இல்லை, கட்சியில் எனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு ஒரு பிள்ளை. கட்சிக்காக நான் உழைத்ததை எல்லாம் சொல்லிக்காட்ட வேண்டியதுள்ளது.
46 ஆண்டுகளாக உழைத்தவரை இப்படி தரக்குறைவாக பேசுவதா? ஒட்டுக்கேட்பு கருவி தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.