மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மக்களவையில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு குறித்து விளக்கமளித்தார்.
அவர் பேசியதாவது,
"இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்னை தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் இண்டிகோ நிறுவனத்திற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மத்திய அரசின் கடுமையான விதிகளை மீறினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பயணிகளுக்கு ரத்து செய்யப்பட்ட பயணங்களுக்கு கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை ரூ.750 கோடிக்கும் அதிகமான தொகை ஏற்கனவே திருப்பித் தரப்பட்டுள்ளது, கூடுதல் கட்டணங்கள் இன்றி மீண்டும் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு இண்டிகோ முழுமையாகப் பொறுப்பேற்க கடமைப்பட்டுள்ளது. இந்தியாவின் விமானப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசு முழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முழுமையான இயல்பு நிலை திரும்பும் வரை அதிகாரிகள் கணிக்கணிப்பார்கள்' என்று தெரிவித்தார்.
அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் பேச்சையெடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.