திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு இன்று(டிச. 11, வியாழக்கிழமை) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தா் தர்காவில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று(புதன்கிழமை) மின்னஞ்சல் வந்தது. பின்னர் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அது புரளி எனத் தெரிய வந்தது.
தொடர்ந்து இன்றும் சிக்கந்தர் தர்காவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு மின்னஞ்சல் வந்தது.
இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என மதுரை மாநகர போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டலையடுத்து திருப்பரங்குன்றம் மலையில் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கடந்த சில நாள்களாக மலை மேல் செல்ல யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.