திமுகவின் கொள்கை முடிவுகளைச் செயல்படுத்தும் துறையாக இந்து சமய அறநிலையத் துறை மாறிவருவதாக பாஜக தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர் சந்திப்பில் வானதி சீனிவாசன் பேசுகையில், ``இந்து மத வழிபாட்டு உரிமைகளை மதிக்க வேண்டுமா? வேண்டாமா? திருப்பரங்குன்றத்தில் இருப்பது முருகனுடைய மலையா? சிக்கந்தர் மலையா?
தீர்ப்பு கொடுத்ததும், அரசு சொல்லும் இது வகுப்புவாதப் பிரச்னை, மதக் கலவரம் என்று தர்கா நிர்வாகத்துக்கு எந்த இடத்திலும் பிரச்னை இல்லை; அவர்கள் எந்த நீதிமன்றத்திலும் முறையீடு செய்யவில்லை, ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.
ஆனால், தீர்ப்புக்கு எதிராக இந்து சயம அறநிலையத் துறை போராடுவதுதான் விசித்திரமாக இருக்கிறது. பக்தர்களின் உரிமைகளைக் காப்பதற்கும், கோயில்களைக் காப்பதற்கும், இந்து மத வழிபாட்டு உரிமைகளைக் காப்பதற்கும்தான் இந்து சமய அறநிலையத் துறை இருக்க வேண்டும். ஆனால், இந்தத் துறை திமுகவின் கொள்கை முடிவுகளை செயல்படுத்தக்கூடிய துறையாக மாறி வருகிறது.
இதற்கு ஏன் இந்து சமய அறநிலையத் துறை என்ற பெயர் இருக்க வேண்டும்? அதனை எடுத்துவிட வேண்டியதுதானே.
கோயில்களின் குடமுழுக்குகளுக்கு அரசு எவ்வளவு பணம் கொடுத்தது? பக்தர்கள் எவ்வளவு கொடுத்தனர்? என்பதனை வெள்ளை அறிக்கையாக அறநிலையத் துறை வெளியிட வேண்டும். இன்னும் ஒருசில கோயில்களில், பக்தர்கள் காசு கொடுத்தால்தான், குடமுழுக்குக்கு தேதி கொடுப்போம் என்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கோயில் குடமுழுக்குகளுக்காக திமுக அரசின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் நிலைமைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது.
மதச்சார்பின்மை என்றால், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்களையும் சமமாக நடத்துவதுதான்.
ஆனால், கிறிஸ்துமஸுக்கு மட்டும் வாழ்த்து சொல்வேன்; விநாயகர் சதுர்த்தி, தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன் என்பது மதச்சார்பின்மையா? ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது சம நீதியா?’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் விவகாரம்: முதன்முறையாக மௌனம் கலைத்த தவெக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.