

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இன்று(டிச. 11) நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்படும், தேர்தல் அறிக்கை தயாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும்.
கூட்டணி குறித்து முடிவெடுக்க தவெக தலைவர் விஜய்க்கு மட்டுமே முழு அதிகாரம், திமுக ஆட்சியை அகற்றி புதிய தமிழகத்தை அமைக்க வேண்டும் என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சிறப்புக் குழுக்களில் இடம்பெறவுள்ள உறுப்புனர்களின் தேர்வு, தவெக தலைவர் விஜய்யுடன் ஆலோசனை நடத்திய பிறகு, விவரம் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.