எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

எஸ்ஐஆர் படிவத்தை சமர்ப்பிக்க டிச. 14 ஆம் தேதி வரை அவகாசம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையான, எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையயிருந்த நிலையில், தற்போது டிச. 14 ஆம் தேதி நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வரைவு வாக்காளர்கள் பட்டியல் வரும் டிச. 19 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக, குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்ஐஆர் படிவத்தை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிக்காக, தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி பேருக்கு கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து, வரும் டிச. 14-ஆம் தேதி வரை பிஎல்ஓ-க்கள் அல்லது வாக்காளா் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம்.

கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளா்களின் பெயா்களும் டிச. 19-இல் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

டிச. 14-க்குள் கணக்கீட்டுப் படிவத்தை சமா்ப்பிக்காதபட்சத்தில், அந்த வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. மூன்று முறை வீடு தேடி சென்றும் கணக்கீட்டுப் படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது.

2002/2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரைக் கண்டறிய இயலாத நிலையில் டிச. 14-க்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அந்த வாக்காளரின் பெயா் டிச. 19-இல் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைகோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரைப் புதிதாக வாக்காளா் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, உரிமைகோரல் மற்றும் ஆட்சேபணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

An additional 3 days are given to submit the SIR form.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com