தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொள்ளும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சி தலைவா் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம், தோ்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஈரோட்டில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள விஜய்யின் பொதுக்கூட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் செய்யப்படவுள்ளன.
தவெக மாநில அளவிலான நிா்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலா்களுக்கு ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் தற்போது வரை அலுவலகத்துக்கு வரவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.