திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் செயலர் பி.டி. செல்வகுமார்!

விஜய்யின் முன்னாள் செயலர் பி.டி. செல்வகுமார் திமுகவில் இணைந்தது பற்றி...
திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் செயலர் பி.டி. செல்வகுமார்
திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் செயலர் பி.டி. செல்வகுமார்
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முன்னாள் செயலாளர் பி.டி.செல்வகுமார், திமுகவில் வியாழக்கிழமை இணைந்தார்.

சென்னையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவர் நடத்தி வந்த கலப்பை மக்கள் இயக்கத்தை திமுகவில் இணைத்தார்.

அவருடன் கலப்பை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் திமுகவில் இணைந்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து பணியாற்றிய செல்வகுமார், பின்னர் விஜய்யின் மேலாளர் ஆனார்.

பந்தா பரமசிவம், ஒன்பதுல குரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள செல்வகுமார், புலி, ஜெயில் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான வசீகரா முதல் காவலன் திரைப்படம் வரை அனைத்துப் படங்களுக்கும் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்திலும் தொடக்க காலம் முதல் பணியாற்றியுள்ள செல்வகுமார், பின்னர் கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Vijay's former secretary, P.T. Selvakumar, has joined the DMK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com