1998ஆம் ஆண்டுக்குப் பின்! சென்னையில் மூன்று ஏரிகள் ஒரே நாளில் நிரம்பின!!

1998ஆம் ஆண்டுக்குப் பின் சென்னையில் முக்கியமான மூன்று ஏரிகள் ஒரே நாளில் நிரம்பின!!
poondi lake
பூண்டி ஏரி (கோப்புப்படம்)
Updated on
1 min read

சென்னை: சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின் சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய ஏரிகள் மூன்றும் ஒரே நாளில் நிரம்பியிருக்கின்றன.

சென்னையில் ஒன்றரை ஆண்டுகளுக்குத் தேவையான குடிநீர் இந்த ஏரிகளில் நிரம்பியிருப்பதால், சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை இருக்காது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் நிரம்பியிருக்கின்றன.

3300 மில்லியன் கனஅடி கொண்ட புழல் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியிருக்கிறது. புழல் ஏரியின் நீர்மட்டம் 21.20 அடி. அது முழுமையாக நிரம்பியிருக்கிறது.

3,231 மில்லியன் கனஅடி கொண்ட பூண்டி ஏரியின் முழு நீர்மட்டம் 35 அடி. இந்த ஏரியும் இன்று முழுமையாக நிரம்பியுள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 1050 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அதுபோல, 3645 மில்லியன் கன அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, டிசம்பர் 12ஆம் தேதி முழுக் கொள்ளவை எட்டியிருக்கிறது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி.

இந்த மூன்று ஏரிகளும் கடந்த 1998ஆம் ஆண்டுதான், ஒரே நாளில் நிரம்பியிருந்தன. அதுபோல சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஒரே நாளில் நிரம்பியிருக்கின்றன.

Summary

After 1998, three important lakes in Chennai filled up in a single day!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com