

மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(டிச. 12) தொடக்கிவைக்கிறார்.
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி முதலில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக சுமார் 1,13,75,492 பேர் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.
தொடர்ந்து கூடுதல் மகளிர் பயனடையும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் 17 லட்சம் பேருக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சி முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலைமையில் இன்று மாலை 3 மணியளவில் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.
மேலும் இந்த 17 லட்சம் மகளிருக்கு ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தும் பணி தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றே அவர்கள் அனைவரின் வாங்கிக்கணக்கிலும் ரூ. 1,000 செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.