

திராவிட மாடல் அரசு என்றாலே அது பெண்களுக்கான அரசு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்க விழாவில் அவர் பேசுகையில், தமிழ்நாட்டு மகளிருடைய முன்னேற்றத்திற்காக, மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன், பெருமை அடைகின்றேன்.
திராவிட மாடல் அரசு என்றாலே அது பெண்களுக்கான அரசு என்று தான் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பெண்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆண்கள் மட்டுமல்ல, இன்றைக்கு ஒட்டுமொத்த இந்திய ஒன்றியமே இப்படிதான் சொல்லிக் கொண்டிருக்கிறது.
அதற்கு காரணம், நம்முடைய முதல்வர் ஒவ்வொரு திட்டத்தையும் கொண்டு வரும்போதும், அதில் மகளிர் முன்னேற்றத்தை மனதில் வைத்து செயல்படுத்தி வருகின்றார்.
இன்றைக்கு பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்றதையும், சாதிப்பதையும் பார்க்கும்போது, நாம் ஒவ்வொருவரும் இதுதான் எங்கள் தமிழ்நாடு, இதுதான் எங்கள் தமிழ்பெண் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நம்முடைய மாநிலம் இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு பெண்ணுரிமையில், இந்தியாவிற்கே, தமிழ்நாடு தான், முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மற்ற மாநிலங்கள் எல்லாம், பெண்களுக்கு உரிமையை தர வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கும்போது, உங்களுக்கு உரிமை என்பதை தாண்டி, அதிகாரத்தை கொடுத்திருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு, நம்முடைய திராவிட மாடல் அரசு, நம்முடைய முதல்வர். இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.