

ஆந்திரத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்கு இருசக்கர வாகனத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் கோயில் பீஷ்கர் ராம கிருஷ்ணரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு இருசக்கர வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
நிறுவன பிரதிநிதிகள் விஜய் கண்ணன் மற்றும் கணேஷ் குமார் ஆகியோர் கோயில் வளாகத்திற்கு அருகில் வாகனத்திற்கு சிறப்பு பூஜை செய்து கோயில் பீஷ்கர் ராம கிருஷ்ணரிடம் சாவியை ஒப்படைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டுளளது.
முன்னதாக கடந்த 7ஆம் தேதி டிவிஎஸ் ஆட்டோமொபைல் நிறுவனமும் அப்பாச்சி ஆர்டிஆர் 310 ரக இரு சக்கர வாகனத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.