

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சனிக்கிழமை சந்தித்தார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், இன்று தில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, கடந்த 32 நாள்களில் 67 கட்சி மாவட்டங்களில் உள்ள 36 கட்சி மாவட்டங்களில் நடைபெற்ற“தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்” யாத்திரையின் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கினேன்.
இந்த நிகழ்வில் பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் மற்றும் தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உடன் இருந்தனர் என்று தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமனைத் தொடர்ந்து தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவையும் நயினார் நாகேந்திரன் சந்திக்கிறார். அப்போது 2026 தேர்தலில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலை அவரிடம் வழங்குகிறார்.
2 நாள் பயணமாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சனிக்கிழமை தில்லி சென்றுள்ளார். தில்லி புறப்படும் முன்பு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் தமிழகம் வரவுள்ள நிலையில் அதற்கு முன்பாக பாஜக விருப்பப் பட்டியலை ஜெ.பி.நட்டாவிடம் வழங்க நயினார் நாகேந்திரன் தில்லி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.