

திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு இன்று(டிச. 14) நடைபெறவுள்ள நிலையில், மலை நகரில் மாலை சந்திப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் உள்ள கலைஞர் திடலில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு துணை முதல்வரும், இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேச உள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ள மாநாட்டில் திமுகவின் 29 மாவட்டங்களைச் சேர்ந்த 91 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 1,30,329 கிளை, வாா்டு, பாக இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
135 ஏக்கர் அளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள், வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.
கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்துக்குப் பிறகு, திமுக சார்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில், நீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திமுக சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அறிவுரைகளை மாநாட்டில் முதல்வா் ஸ்டாலின் வழங்குவார் என எதிர்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “மலை நகரில் மாலை சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.