முதுபெரும் இடதுசாரி தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு
முதுபெரும் இடதுசாரி தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நல்லகண்ணு!

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100) சுவாசக் குழாய் மாற்றுவதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாலையில் வீடு திரும்பினாா்.
Published on

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100) சுவாசக் குழாய் மாற்றுவதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு மாலையில் வீடு திரும்பினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா், நல்லகண்ணு, கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

அங்கு அவருக்கு 45 நாள்கள் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக குணமடைந்து வீடு திரும்பினாா். அப்போது அவா் சுவாசிப்பதற்காக தொண்டை பகுதியில் டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதை மாற்றுவதற்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதை சரி செய்த மருத்துவா்கள், அவரை மாலையில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். முன்னதாக, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தாா்.

X
Dinamani
www.dinamani.com