நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
நல்லகண்ணு (கோப்புப்படம்)
நல்லகண்ணு (கோப்புப்படம்)
Updated on
1 min read

முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு (100), சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று(டிச. 14) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லகண்ணுக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆக. 22-ஆம் தேதி தவறி விழுந்து காயமடைந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

45 நாள்கள் வெண்டிலேட்டர் சிகிச்சையிலும், தீவிர சிகிச்சையிலும் இருந்த அவருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அக். 10-ஆம் தேதி வீடு திரும்பினார்.

வயிற்றுப் பகுதியில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடு திரும்பினார்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மூச்சுத் திணறல் காரணமாக, இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லகண்ணு நலமுடன் இருப்பதாகவும், பரிசோதனை முடிந்து இன்று மாலையில் வீடு திரும்பவுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Nallakannu (100) was admitted to the Rajiv Gandhi Government General Hospital in Chennai today (December 14).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com