

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் என்ற பெயரில், அன்புமணி பணமோசடியில் ஈடுபடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் ராமதாஸ் அளித்த புகாரில், "விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பணமோசடியில் ஈடுபடுகிறார். விருப்ப மனுக்களைப் பெற கட்சி நிறுவனராகிய எனக்கு மட்டும்தான் உரிமையுண்டு.
பாமக பெயரையோ கட்சியையோ பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்களை டிச. 14 ஆம் தேதிமுதல் பெறப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்த நிலையில், ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: பேரவைத் தேர்தல்: டிச. 17-ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.