வருகிற 2026 ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டிற்கு பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடியோ ஒன்றை வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வரும் நிலையில் தேமுதிக ஏற்கெனவே வருகிற ஜனவரி மாதம் தேமுதிக மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி, ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டிற்கு பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில், "தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஒன்றியம், நகர, கிளை கழக நிர்வாகிகளுக்கும் மகளிர் அணி சகோதரிகளுக்கும் சார்பு அணி நிர்வாகிகளுக்கும் தலைவரை உயிர் மூச்சாய் கொண்டுள்ள அனைத்து தொண்டர்களுக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகிற ஜனவரி 9 - 2026 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூரிலே பாசார் கிராமத்தில் நடக்க இருக்கின்ற மாநாட்டை மிக பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தந்து அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்" என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.