

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நாளை(டிச. 16) முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான், மழை தொடர்பாக தெரிவித்திருப்பதாவது:
”அடுத்த இரண்டு நாள்களில் (டிச. 16, 17 ஆகிய தேதிகளில்) தமிழகத்தின் சில பகுதிகளில் மேகமூட்டம் மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், குறைந்தபட்ச வெப்பநிலையே நிலவும்.
டிசம்பர் 19 ஆம் தேதி முதல் 21 வரை கவனமாக இருங்கள். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு குளிரான நாள்களாகக் கணிக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால், மற்ற உள் மாவட்டங்களில் அதிகபட்ச குளிர் நிலவும்.
அதற்கு முன்னதாக, டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
எனவே, அடுத்த இரண்டு நாள்களுக்கு உங்களுடைய குடையை எடுத்துச் செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: விஜய்யின் தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.