எதிர்கால தலைமுறை வளர்ச்சிக்கு கலைத்துறையின் பங்கு முக்கியம்: மு.க. ஸ்டாலின்

எதிர்கால தலைமுறையை பண்பாடுகொண்ட தலைமுறையாக மாற்றுவதில் கலைத்துறையின் பங்கு முக்கியமானது என முதல்வர் பேச்சு...
நாசருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்
நாசருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்படம் - DIPR
Updated on
2 min read

எதிர்கால தலைமுறையை பண்பாடுகொண்ட தலைமுறையாக மாற்றுவதில் கலைத்துறையின் பங்கு முக்கியமானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் விருது மற்றும் இசை, நாட்டிய விழா இன்று (டிச., 15) நடைபெற்றது. இதில், விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.

விழாவில் உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
விழாவில் உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் - DIPR

விழாவில் சிறப்புரையாற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

''நாசருக்கு கலைஞர் விருது வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞரின் பராசக்தி வசனம் பேசித்தான் வாய்ப்பு பெற்றேன் என நாசர் பல இடங்களில் பேசியுள்ளார். நன்றி மறக்காத மனிதராக நாசர் இருக்கிறார்.

சினிமாவில் ஓய்வின்றி இயங்கியபோதும் கலைஞர் கேட்டுக்கொண்டதால், சின்ன திரை தொடரில் நடித்துக்கொடுத்தார். நகைச்சுவை தென்றல் என்ற பட்டம் பெற்ற புலவர் சண்முக வடிவேலின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டு தூங்கிய இரவுகள் உண்டு. அவர் இயல் செல்வம் விருது பெற்றது மிகுந்த பொருத்தமானது.

இசையில் தனக்கென தனி இடம் பிடித்தவர் காயத்ரி வெங்கட்ராமன். நாட்டிய செல்வம் விருது பெற்றுள்ள அனிதா, சென்னையில் மிகப் பிரபலமான நாட்டிய ஆசிரியை.

டிகேஆர் ஐயப்பன், டிகேஆர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் தந்தையும் இசைக்கலைஞர்தான். ஆனால், குருவை மிஞ்சும் சிஷியர்களாக இவர்கள் உள்ளனர். விருது பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

இனி எதிர்காலத்தில் நீங்கள் எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் பெறலாம். ஆனால், அரை நூற்றாண்டு காலமாக இயங்கக் கூடிய அமைப்பு அளித்துள்ள பட்டம் என்பதால் இது கூடுதல் சிறப்பானது. உங்கள் கலைப்பணி தொடர்ந்து சிறப்பாக தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் பேசினார்.

10 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த திரைப்பட விருதுகள் நமது ஆட்சியில்தான் மீண்டும் வழங்கப்பட்டது. கலைஞர் தொடக்கி வைத்த சின்ன திரை விருதுகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. 2022-ல் 15 ஆண்டுகளுக்கான விருதுகளை மொத்தமாகக் கொடுத்துள்ளோம்.

வசனகர்த்தா ஆரூர்தாஸ், கவிஞர் மு.மேத்தா, பி.சுசீலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியிருக்கிறோம்.

தகுதியான நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம், விவேக், ஜெய்சங்கர் நினைவாக தெருக்களுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறோம். இசைஞானி இளையராஜாவுக்கு உலகமே வியக்கும் வண்ணம் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தியுள்ளோம். சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

கலைஞர்களை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. எதிர்கால தலைமுறை வளர்ச்சிக்கு, கலையின் பங்கு முக்கியமானது'' என முதல்வர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | நடிகர் நாசருக்கு கலைஞர் விருது!

Summary

role of arts is crucial for development of future generations M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com