

சென்னையில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் விருது விழாவில் நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச., 15) கெளரவித்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் விருது மற்றும் இசை, நாட்டிய விழா இன்று (டிச., 15) நடைபெற்றது. இதில், விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.
இதில், திரைப்படங்களில் நடித்து, கதாசிரியர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களை எட்டிய நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. இதேபோன்று இசை, நடனம் என பல துறைகளில் சிறந்த விளங்கியவர்களுக்கு முதல்வர் விருது வழங்கினார்.
இதன்படி, நாதஸ்வர கலைஞர் வடுவூர் எஸ்.என்.ஆர். மூர்த்திக்கு ராஜரத்னா விருது வழங்கப்பட்டது.
நகைச்சுவை தென்றல் என்ற பட்டம் பெற்ற புலவர் சண்முக வடிவேலனுக்கு இயல் செல்வம் விருது வழங்கப்பட்டது.
கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி வெங்கடராமனுக்கு இயல் செல்வம் விருது அளிக்கப்பட்டது.
நடனக் கலைஞர் அனிதா நாட்டிய சேவையை பாராட்டி நாட்டிய செல்வம் விருது வழங்கப்பட்டது.
டிகேஆர் ஐயப்பன், டிகேஆர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு நாதஸ்வர செல்வம் விருது வழங்கப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தவில் உதவி பேராசிரியராக உள்ள நாகூர் செல்வகணபதிக்கு தவில் செல்வன் விருது வழங்கப்பட்டது.
மிருதங்க கலைஞர் தஞ்சை முருகபூபதிக்கு மிருதங்கச் செல்வன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க | தவெக கூட்டம்: தொண்டர்களின் பாதுகாப்புக்காக முள் கம்பி சுற்றப்படும் - செங்கோட்டையன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.