

விஜய்யின் ஈரோடு கூட்டத்துக்கு காவல் துறை விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று (டிச., 15) கேட்டுக்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை (டிச., 18) விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனையொட்டி செய்தியாளர்களுடன் செங்கோட்டையன் பேசியதாவது,
தவெகவில் இணைந்த பிறகு புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது. ஒரு சகோதரனாக விஜய் என்னை அரவணைத்துக்கொண்டார். அவரை முதல்வராக்குவதற்காக கடுமையாக உழைப்போம்.
ஈரோட்டில் விஜய் கூட்டத்தில் பங்கேற்கும் மக்கள், காவல் துறை விதிகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கூட்டம் நடைபெறும் இடத்தில், குடிநீர், அவசர ஊர்திகள், கழிவறை, தீயணைப்பு வாகனம், பாதுகாப்பு அரண் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பெரிய விளம்பரம் உள்ள, கட்-அவுட் உள்ள இடங்களில் தொண்டர்கள் ஏறாமல் இருப்பதற்கு முள் கம்பிகள் சுற்றப்படும்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து, பின்பு அங்கிருந்து கூட்டம் நடைபெறும் இடத்துக்கு கார் மூலம் விஜய் வருவார். விதிகளுக்குட்பட்டு தவெக நிகழ்ச்சி வரலாறு படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க | காந்தியின் பெயரை நீக்கிவிட்டு வடமொழி திணிப்பு! - முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.