

சென்னை விமான நிலையம் அருகே 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில், ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 16) அடிக்கல் நாட்டினார்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதை அவா்களின் வாழ்நாள் கடமைகளில் முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு ஏதுவாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படுகிறது.
ரூ.39.20 கோடியில் 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப கட்டப்படும் தமிழ்நாடு ஹஜ் இல்ல கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.