

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் ஆகியோர் இன்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது வைகோ, ஜன.2 இல் மதிமுக சார்பில் தொடங்கும் மதுஒழிப்பு நடைபயண அழைப்பிதழை முதல்வரிடம் வழங்கினார்.
அதேசமயம் பெ.சண்முகம் குடிமனை பட்டா கோரிக்கை தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிய வந்துள்ளது.
முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலர் வைகோ ஜனவரி 2 ஆம் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நடைபயணம் திருச்சியில் தொடங்கி மதுரையில் முடிவடையும் எனத் தெரிகிறது. இதனை தொடங்கி வைக்க வருமாறு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வைகோ அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.