

எதிர்வரும் பேரவைத் தேர்தலுக்காக திமுகவில் 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. விருப்ப மனு விநியோகம், ஆலோசனைக் கூட்டம் நடத்துவது போன்றவைகள் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அண்மையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 14) நடைபெற்றது. மகளிர் மாநாட்டையும் திமுக நடத்தவுள்ளது.
இந்த நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ”நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள் வணிக அமைப்புகள் -இளைஞர்கள் விவசாய அமைப்புகள் - தொழிலாளர் அமைப்புகள் - தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட திமுக தலைமையால் அமைக்கப்பட்ட குழுவினர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.