சென்னை கொளத்தூரில் அரசின் நலத்திட்டங்களை தொடக்கிவைக்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களைச் சந்தித்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் பெரியார் நகரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் அமைய உள்ள ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் அமுதம் அங்காடி கட்டடப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
முன்னதாக கொளத்தூர் வந்த முதல்வருக்கு அப்பகுதி மக்களும், திமுக தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காரில் இருந்து இறங்கி மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோரை சந்தித்து உரையாடினார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.