

சிறப்பு ரயில்கள்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வருகின்ற டிச. 25 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை முடித்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ரயில்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
வருகின்ற டிச. 28 மற்றும் ஜன. 4 ஆம் தேதிகளில் நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இரு நாள்களும் நெல்லையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில்கள், மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் வந்தடைகின்றன. மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக இயக்கப்படவுள்ளன.
மறு வழித்தடத்தில் டிச. 29 மற்றும் ஜன. 5 ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நெல்லை சென்றடைகின்றன.
இந்த நான்கு ரயில்களுக்கான முன்பதிவும் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.