மக்களுக்காக புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் பிரசாரப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியதாவது:
”பெரியார் பிறந்த மண்ணுக்கு தவெக தலைவர் வருகைதந்துள்ளார். ஆட்சிக்கு வர வேண்டும் என்று பலர் கனவு காணுவதாக அனைவரும் கூறினார்கள். ஆனால், நாளைக்கு ஆட்சிக்கு வரப் போவது புரட்சித் தளபதிதான்.
நல்ல தலைவர் வேண்டும் என்று மக்கள் பல நாள் கண்ட கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. விஜய் மனிதநேயம் மிக்கவர், நல்லவர், வல்லவர், உங்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர். உலக வரலாற்றில் மக்களுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வந்தவர்களில் புரட்சி தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதியை இன்று காண்கிறேன்.
234 தொகுதிகளிலும் விஜய் யாரை விரல் காட்டுகிறாரோ அவர்தான் தமிழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.